name
1

திரு. ஜெ பீட்டர் அந்தோணிசாமி

மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்

2

திரு.பி.சுந்தரவளவன்

மாநில பொதுச் செயலாளர்

மாநிலத் தோழமைகளுக்கு வணக்கம்!

தமிழக அளவில் தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு பயிலரங்கம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் எதிர்வரும் ஆகத்து 29 (சனிக்கிழமை) அன்று தென்காசியில் நடைபெற உள்ளது.
இப்பயிலரங்கம் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பங்கேற்க உள்ள 3 பிரதிநிதிகளை உறுதி செய்யும் பணியை, தொடர்புடைய மாநிலச் செயலாளர்கள் விரைந்து நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சில மாவட்டங்களுக்கான பொறுப்புகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளன. அந்தப் பொறுப்புகள் தென்காசி பயிலரங்கில் அறிவிக்கப்பட உள்ளதால், தங்களுக்கு தொடர்புடைய மாவட்டங்களில் இருந்து பங்கேற்க வேண்டிய ( மாவட்ட பொறுப்பாளம்களாக பொறுப்பேற்க உள்ள) 3 மாவட்டப் பிரதிநிதிகளையும் உறுதி செய்து, தென்காசி பயிலரங்கில் பங்கேற்கச் செய்யுமாறு மாநில அமைப்புச் செயலாளர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநிலத் தலைமை
தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கம்
பதிவு எண்: 95/2026

News & Events

t5

Gallery

12
34